புண்யகோடி: முட்டாள்! 40 இளம் பெண்ணுக்கு வாழ்வை கொடுக்கப் போகிறேன்! விஷயம் புரியாமல் உளறாதே ! இந்தப் பெண்ணை யாரும் கல்யாணம் பண்ணிக்கமாட்டேங் கிறான். இது ஒரு ஊமை / பாண்டியன் : பேசத் தெரிந்த பெண்களையே பேசாமடந்தை யாக்கிவிடும் பைத்தியக்கார சமூகம், ஊமைகளையா உயி ரோடு விடப்போகிறது. புண்யகோடி: இப்ப என்னடா சொல்றே ! பாண்டியன் : உங்கள் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டு கிறேன். புண்யகோடி: முடியாது! உன் முடிவைத்தான் மாற்றிக் கொள்ள வேண்டும். உனக்கு முன்னாடி பிறந்தவன் நான்! பாண்டியன் : யார் மறுக்கிறார்கள் ! பேரன் பேத்தியை
கொஞ்சவேண்டிய வயது! புண்யகோடி: உன்னைப்பெத்து வளர்த்து பாதுகாத்து மனுஷ னாக்கி விட்டதுக்கு, இப்படி எதிர்த்துத்தாண்டா பேசணும்! பாண்டியன்: அதற்காக ஆயிரம் வணக்கம் செலுத்துகிறேன். ஆனால் மகன் கல்யாணத்தில், மாலை எடுத்துத் தரவேண்டிய பருவத்தில், மாப்பிள்ளையாக மாறுகிறேன் என்கிறீர்களே; அதை என்னால் அனுமதிக்கவே முடியாது ! புண்யகோடி: சீ! நீ என்னடா இஷ்டம் நான் செய்கிறேன். அனுமதிக்கிறது. பாண்டியன்: வேண்டாமப்பா இந்த விபரீத முடிவு! புண்யகோடி : சீ ! என்கிட்ட பேசாதே ! பாண்டியன் : உங்கள் கல்யாணத்தை? புண்யகோடி: நடத்தத்தான் போறேன். பாண்டியன்: என்னை வெறுத்துவிட்டா? புண்யகோடி: உன்னை விரட்டிவிட்டு. என்