41 பாண்டியன்: நீங்கள் விரட்டவேண்டாம். நானே போகிறேன். புண்யகோடி: போடா! என் முகத்திலேயே முழிக்காதே ! போடா போ! பாண்டியன்: போகிறேன். தெளியட்டும். (போகிறான்) உங்கள் போதை விரைவில் புண்யகோடி: போடா போ ! போதை தெளியட்டுமாமில்ல. இங்க என்ன குடிச்சிபிட்டா உட்கார்ந்திருக்காங்க. காட்சி 38] [தெரு-இரவு (பாண்டியன் குழப்பமுடன் நடந்து கொண்டிருக் கிறான் - அவன் குரல் மட்டும் முகத்தில் ஒலிக்கிறது] குரல்: கல்யாணத்தன்று ஒரு பெண் ஏமாற்றிவிட்டாள். காதலுக்காக இரண்டு பெண்கள் போட்டி போடுகிறார்கள். கம்பூன்றி நடக்கும் ஒரு கிழவனின் கட்டிலறை ஒரு பெண் ணுக்கு வெட்டுப்பாறையாகப் போகிறது. வேடிக்கையும் வேதனையும் நிறைந்த பெண் சமுதாயம்! (பாண்டியனை பூமாலை சந்தித்தல். பாண்டியன் திடுக் கிட்டு நிற்கிறான்) பாண்டியன் : பூமாலை! பூமாலை: (நெஞ்சடைக்க) மன்னித்து விடுங்கள் என்னை !... உங்கள் மனதைக் குழப்பி விட்டேன்.
பாண்டியன் : நீதான் என்னை மன்னிக்கவேண்டும் ! துல்யமான உன் வெள்ளை இருதயத்தில் காதல் என்னும் கரும்புள்ளி ஏற்பட நான்தான் காரணமாயிருந்தேன் !... பூமாலை: காதல் கரும்புள்ளியல்ல. எட்டாத திராக்ஷை புளிக்குமா பாண்டியன் ! (வேதனை) குமுதா, உங்கள் இதயம் கவர்ந்தவள் ! அவளை ஏற்றுக்கொள்ளுங்கள்! பாண்டியன் : என் வாழ்க்கை ஒரு போட்டி மேடை! பூகம் பம்/ அதில் குமுதா போன்ற பூந்தோட்டங்கள் சிக்கி சீரழிய வேண்டாம்!...