46 பரந்தாமன்: (கேலியாக சிரித்து விட்டு) சரியான திருடனப்பா! நீ மரியாதையாகப் பணத்தைக் கொடுக்கிறாயா இல்லையா?... பாண்டியன்: என்ன சொல்கிறாய் இப்போது? பரந்தாமன்: ஏய்! சரிதான். வீட்டுக்குள்ளேயே திருட ஆரம் பிச்சுட்டியா நீ! நானே வீட்ல திருடுறது கிடையாது.... (பரந்தாமா என்ற குரல் கேட்டுத் திரும்புகிறான்- பூமாலை வருகிறாள்.) பூமாளை: என்னப்பா...... பரந்தாமன்: பாரு அக்கா. பணம் வச்சிருந்தேன் திருடிவிட் டான். பூமாலை: ஏது பணம்? பரந்தாமன்: பதிப்பகத்திலேயிருந்து வாங்கிக்கொண்டுவந்தேன். பூமாலை: தெரியும் எனக்கு எங்கேயிருந்து வாங்கிக்கொண்டு வந்ததுயென்று. பரந்தாமன்: உண்மைதான் அக்கா! பூமாலை: முத்திரை போட்டிருக்கிறது பார். முதுகெலும்பு உடைய பாடுபடும் தொழிலாளிக்கு முகாரிதான் மோகன கீதமா என்று முழக்கம் செய்தாயே. அந்த முழக்கத் திற்குப் பரிசாக மில் முதலாளி வழங்கிய பணம் இது வென்று முத்திரை போட்டிருக்கிறது பார் ! (பணக் கட்டை காட்டுகிறாள். முத்திரையில் சிவசக்தி மில் மின்னுகிறது) பரந்தாமன்: ஓ.... பணத்தைத் திருடி உன்னிடம் கொடுத்து விட்டானா? பூமாலை போதும்! கருங்காலித்தனம் செய்து ஏழைகளைக் காட்டிக் கொடுத்துவிட்டு கைக் கூலி பெறுகிற உனக்கு பேச்சுவேறு.
பக்கம்:திரும்பிப்பார்.pdf/54
தோற்றம்