உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 48) 55 [மில் வாசல்: ரோடு [புண்யகோடியும் இரண்டு மூன்று தொழிலாளர் களும் பேசிக்கொண்டு வருகின் றனர்.] ஒரு தொழிலாளி: (புண்யகோடியிடம்) என்னங்க மேஸ்திரி குறைகளையெல்லாம் சீக்கிரம் கவனிக்கப்போறாரு முத லாளின்னீங்க ஒண்ணியும் காணுமே ! புண்யகோடி: அதெல்லாம் சீக்கிரம் நடக்கும் பாரு !... நடக்க லேன்னா நம்ம தலைவர் இறுதிப் போராட்டம் ஆரம்பிச் சுடுவாரு! தொழிலாளி: அது சரி... இப்ப ஆரம்பிச்ச ஜனவரிப் போராட் டமே பிசு பிசுண்ணு போய்ட்டுதுண்ணு சில பேர் பேசிக் கிறாங்களே! புண்யகோடி: பேசுவாங்க, பேசுவாங்க ! முட்டாள்கள். நம் முடைய தலைவர் பரந்தாமனை சாதாரணமா நினைச்சுக் கிட்டாங்க! புலி பதுங்குறது பாய்ச்சலுக்கு அடையா ளம்ணு சொல்லு. தொழிலாளி: பதுங்கிறது புலியா பூனையான்னுதானே சந்தே கப்படுறாரு பாண்டியன்! புண்யகோடி: பாண்டியன்... அந்தப் பய பேச்சை என்கிட்டே பேசாதிங்க...அயோக்கியப் பயல் / அப்பன் கல்யாணம் பண்ணிக்கிறதைத் தடுக்கிற பயலை அகில உலகத்திலியும் நான் கண்டதில்லை. தொழிலாளி: சரி மேஸ்திரி நாங்க வர்ரோம்... (பரந்தாமன் காரிடம் நின்று கொண்டிருக்கிறான்) புண்யகோடி: நமஸ்காரம்... பரந்தாமன் : என்ன...ஆங்... புண்யகோடி : இப்பதான் மில்வேலை முடிஞ்சு... பரந்தாமன் : ம்... நான் சங்கத்துப் பக்கம் போய்ட்டு வர்றேன்...