65 பாண்டியன் : என்ன சார் சொல்றீங்க... சப்- இன்ஸ்பெக்டர்: நான் சொல்லலே, இந்த ஆர்டர் சொல்லுது! எய்ட் செவன் சிக்ஸ், கமான்.... (பூமாலை குமுதா திகைப்பு-வீடு சோதனை போடப் படுகிறது. எல்லா இடங்களிலும் போலீஸார் தேடுகிறார்கள் - ) குமுதா: சின்னம்மா (கட்டிக் கொள்ளல்) பூமாலை: சும்மா இரு. சும்மா இரு. ஒண்ணுமில்லை. பாண்டியன்: குமுதா ! வேண்டும். பைத்தியம் ! என்ன இது ! ஏன் பயப்படுகிறாய்? குற்றம் இருந்தால்தானே பயப்பட போலீஸார் எல்லா பெட்டிகளிலும் தேடுகிறார்கள். எதிலும் எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை.) சப்-இன்ஸ்பெக்டர்: ம்... கிடைக்கலியே. (குண்டுமணி பூமாலையின் பெட்டியை கொண்டு வந்து) எடுத்துக் குண்டுமணி: ஏன் சார் இதை மிச்சம் வச்சுட்டுப் போறீங்க. இதையும் பாத்துக்குங்க கம்மா !... (பூமாலையிடம்) சாவி கொடுங் (பூமாலை சாவிதர, பெட்டித் திறக்கப்படுகிறது) சப்-இன்ஸ்பெக்டர்: என்னப்பா உனக்கு கோபம் வருது ! எங்க கடமையை நாங்க செய்றோம். (துணிமணிகளை எடுத்துப் பார்க்கும்போது கடைசியில் நெக்லஸ் இருக்கிறது. பூமாலையின் திகைப்பு. சப்- இன்ஸ்பெக்டர் நெக்லஸை திருப்பித் திருப்பிப் பார்க்கிறார். நெக்லஸ் பின்புறத்தில் என்ற எழுத்துக்கள் இருக்கின்றன.) சப்-இன்ஸ்பெக்டர்: உஷா ! இதேதான். 5 OT உஷா (குமுதா - பாண்டியன் - பூமாலை திகைப்பு)
பக்கம்:திரும்பிப்பார்.pdf/73
தோற்றம்