உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சப்-இன்ஸ்பெக்டர்: அகப்பட்டுவிட்டது. பாண்டியன் உம்மை அரஸ்ட் செய்திருக்கிறேன். பாண்டியன் : ஆ / பூமாலை: இது என் பெட்டி சார். அவரை விட்டுடுங்க... சப்- இன்ஸ்பெக்டர் : ஸ் !... சொல்ல வேண்டியவைகளை கோர்ட் டில் சொல்லுங்கள்.என் வேலையை யாரும் தடுக்காதீர்கள். (போலீஸாரிடம் ) ம்... கொண்டு போங்கள் !... ... குமுதா: (பாண்டியனிடம் ஓடிவந்து அலறல்) பாண்டியன்! பாண்டியன் ! பாண்டியன்: குமுதா! குழுதர இது என்ன பாண்டியன். எனக்கொன்றுமே புரிய வில்லை... ... பாண்டியன் : புரியவில்லையா ! இதுதான் உலகம்! பூமாலை: சப் - இன்ஸ்பெக்டர் சார்! நான் தான் ஊரிலிருந்து வந்தேன். இது என் பெட்டிதான். பாண்டியன் மீது எந்த குற்றமுமில்லை. அவரை விட்டு விடுங்கள். சப்- இன்ஸ்பெக்டர்: தொந்திரவு கொடுக்காதீர்கள். கொண்டு போங்கள். 2...... (பாண்டியனை அழைத்துச் செல்கிறார்கள்) குமுதா : (திகைத்து நின்று ஓடுகிறாள்) பாண்டியன், பாண்டி யன்...... (ஓடுகிறாள்) (பாண்டியன் ஜீப்பில் ஏற்றப்படுகிறான். அலறியோடும் குமுதாவை பூமாலை பிடித்துக்கொண்டு அணைத்து) பூமாலை: குமுதா...அமைதியாயிரு !... அழாதே ! அழாதே ! குமுதா : அழாமல் ஆனந்தமடையச் சொல்கிறாயா ! எனக்கு எப்படி வரும் ஆனந்தம்? அவரை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று நான் கங்கணம் கட்டிக்கொண்டா வந்தேன், காரியம் கை கூடியதும் மகிழ்ச்சியடைய......