70 பூமாலை : என்ன செய்யப் போகிறேனா! முன்பே சொன்னாயே ; காட்டிக் கொடு என்று, அதை செய்யப் போகிறேன் ! பரந்தாமன் : ஆ ! பூமாலை: கூண்டிலே நிறுத்துகிறேன். குற்றவாளி நீதான் என்று கூறுகிறேன். ஊரார் நகைக்கட்டும். ஊதாரித் தலைவனே என்று கேலி செய்யட்டும் ! பரந்தாமன் : அக்கா வேண்டாம் ! பூமாலை: அப்படிச் செய்தாலாவது நீ திருந்தமாட்டாயா? அதையும் செய்து பார்க்கிறேன். உன்னைத் தம்பியாகப் பெற்றதற்கு வேறென்னதான் எனக்கு சுகம் / பரந்தாமன்: என்னைக் காட்டிக் கொடுப்பதுதான் உனக்குச் சுக மென்றால், நான் கைதியாக நிற்பதுதான் உனக்குக் களிப்பு தரும் காட்சி என்றால், உன்னை நம்பி என்னை ஒப்புவித்து விட்டுப் போனார்களே- அந்த அம்மா அப்பாவின் ஆத்மாக் கள் நீ செய்யும் அந்தப் புனித காரியத்தால்தான் சாந்தி யடையுமென்றால் இப்போதே போ ! போலீஸாரிடம் சொல்/ பொதுமக்களிடம் பறை சாற்று! தம்பியைக் காட் டிக் கொடு! போ அக்கா போ ! அம்மாவும் அப்பாவும் உனக்கு இட்ட கட்டளை அதுதானே ! அதை நிறை வேற்று போ! பூமாலை: பரந்தாமா! (அழுதல்) பரந்தாமா இனிமேலாவது நீ திருந்தி நடக்கிறாயா? பரந்தாமன்: நான் என்ன தவறு செய்கிறேன் திருந்தி நடக்க. (போகிறான். பூமாலை கண்ணீருடன் நிற்கிறாள்.) காட்சி 61] (டைப்ரைட்டிங் ஆபீஸ் (அங்கே பல கிளர்க்குகள். குமுதாவும் டைப் செய்து கொண்டிருக்கிறாள். எல்லா மேஜையிடமும் கவ னித்து வந்த மேனேஜர் குமுதாவுக்கு பின்புறம்
பக்கம்:திரும்பிப்பார்.pdf/78
தோற்றம்