உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கொஞ்சமா அந்தப் பாண்டியன் கட்சியிலே சேர்ந்துகிட்டு, பகுத்தறிவு அது இதுன்னு பேசிகிட்டு நம்பளை கொஞ்சம் கேவலமா நினைக்கிறாங்க! உம். நீங்க பரந்தாமன் : பரவாயில்லை. அவர்களால் என்ன செய்ய முடி யும்? அவனுந்தான் ஜெயில்ல கிடக்கிறான். உம். போங்க நான் எல்லாம் உடனடியாக கவனிக்கிறேன். வர்ரேன். நமஸ்காரம். என்ன, புண்யகோடி: நான் களைத்தானே .... கருடன்: வாழ்க தொழிலாளி வர்க்கம் ! உன் பரந்தாமன்: இவன் வேற தொழிலாளி தொழிலாளின்னு உயிரைவாங்குறான். கருடன்: அட சும்மா இருப்பா ! அந்தத் திரை மறைவிலே தானே நம்ம நினைச்சதெல்லாம் நடத்த முடியுது ! பரந்தாமன்: நினைத்ததெல்லாம் வெற்றிதான், ஆனாலும் அந்த உஷா விஷயம் Failure ஆயிட்டுதே! கருடன் : அதெல்லாம் ஒண்ணும் ஆகாது! அதுக்குத்தான் சொல்றேன், நீ உஷாவை கல்யாணம் பண்ணிட்டீன்னா, அவ்வளவு பெரிய மில்லு உனக்குச் சொந்தம் ! ஆயிரக் கணக்கான தொழிலாளிகள் உனக்கு அடிமை..... பரந்தாமன் : தொழிலாளி தலைவன் மில் முதலாளி மகளை கல் யாணம் செய்வது BO.. கருடன் : அட "மாஸ் சைகாலஜி" தெரியாது உனக்கு? அதுக்கும் ஒரு காரணம் சொல்லிவிடலாம். பரந்தாமன்: சொல்லலாம். ஆனால் முன்னுக்குப் பின் முரணா கப் பேசுவது...... கருடன்: அப்படித்தான் பேசணும், அப்பறம் தலைவர்னா என்னா லக்ஷணம்.... நான் சொல்றபடி செய்யப்பா ! பரந்தாமன் : உஷாவைக் கல்யாணம் பண்ணவேண்டும். அவ் வளவு தானே !