உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 புண்யகோடி: அது கெட்டுது போ ! நீ சாப்பாடு போடுறியா இல்லியா / காட்சி 68]

[போலீஸ் ஸ்டேஷன்-- இரவு போலீஸ்: போலீஸார் மீது கல்வீச்சு !

II போலீஸ்: மில்லின் கதவையே தூள் தூளாக உடைத்து விட்டார்கள். மில் முதலாளி வீட்டிலும் கல் வீசினார்கள். போலீஸ்: தெருவில் ஜனங்கள் நடமாடவே பயப்படுகிறார்கள். போலீஸ் : நாளைக்கு காலையிலே பெரிய ஊர்வலம் ஒண்ணு இருக்காம். சப்-இன்ஸ்பெக்டர்: (வந்து) சரி. முக்கியஸ்தர்களை யெல்லாம் கைதுசெய்ய உத்திரவு வந்திருக்கு. புறப்படுங்க! காட்சி 69] (சாப்பாட்டு அறை [ராதா சாப்பாடு போட ஓடுகிறாள்] புண்யகோடி: (சாப்பிட்டுக் கொண்டே) ராதா! விடியக் காலம் நாலு மணிக்கு எனக்கு வேலையிருக்கு தலைவர் பரந் தாமன் கட்டளைப்படி பெரிய புரட்சி ஊர்வலம் நடத்த தொழிலாளர்களை ஒன்று சேர்க்கணும்/ மறந்துடாதே! நாலு மணிக்கெல்லாம் எழுப்பி விட்டுடு !... (இருவரும் தூங்கிக்கொண்டிருத்தல். மணி பனிரெண்டு அடிக்கப் போகிறது. ஒரு கை கை கடிகாரத்தின் முட்களை நகர்த்தி நாலுமணி காட்டச் செய்கிறது. அது பரந்தாமன் கை. மணி நான்கு அடிக்கிறது. ராதா எழுந்து விடுகிறாள் - புண்யகோடியை எழுப்புகிறாள்) புண்யகோடி: (எழுந்து கடிகாரத்தைப் பார்த்து) சபாஷ் ! பின் தூங்கி முன் எழும் பத்தினி என்பார்கள் முன்னோர் கள். அந்தப் பத்தினி நீயேதான் !....ம் கோட்டை எடு !