85 முதலாளி : சரிதான். இப்ப தலைமைப்பதவி மாறியிருக்கோ தம்பி போயி அக்காள் / குடும்பத்துக்குள்ளேயே சுத்துகோ தலைமைப் பதவி. பூமாலை : தவிப்பவர்கள் குறையைச் சொல்ல தலைவியாகத் தான் வரவேண்டுமோ? அய்யா அப்படியொன்றும் நான் வரவில்லை. ஏழைத் தொழிலாளிகளின் ஏக்கத்தைப் போக்குகிறேன் என்று சொல்லுங்கள் - போதும். முதலாளி இந்தப் புத்தியை முன்னமேயே உன் தம்பிகிட்ட சொல்லியிருக்கணும் நீ. பூமாலை: தம்பி செய்த பாபத்திர்க்குத்தான் அக்காள் பிராயச் சித்தம் செய்ய வந்திருக்கிறாள். தயவுசெய்யுங்கள் அய்யா. முதலாளி: முடியாது...போ.. போய்விடு. பூமாலை: (காலில் விழுந்து) அய்யா! உங்கள் காலைப்பிடித்துக் கொள்கிறேன், கதியற்றவரின் கண்ணீரைத் துடையுங்கள். பசி, பட்டினி, பஞ்சத்தில் பாட்டாளிகளைத் தள்ளாதீர்கள். என்ன இருந்தாலும் அவர்கள் உங்களிடம் வேலை செய்தவர் கள். உங்களுக்கு குழந்தைகள் மாதிரி ஐயா !... முதலாளி: விடு காலை. பூமாலை : விட முடியாது. வேதனைக்குரலுக்கு நீங்கள் செவி சாய்க்கும் வரையில், வாழ முடியாதவர்களுக்கு நீங்கள் வகைசெய்யும் வரையில் விட முடியாது. முதலாளி : சீ மூதேவி. (காலை உதறி போதல் - பூமாலை காயமடைதல்- அப்போது வந்த உஷா) உஷா : அடெடெ / பூமாலையா.... பலமாக அடிபட்டுவிட்டதே. டேய்...யார் அங்கே?
பக்கம்:திரும்பிப்பார்.pdf/93
தோற்றம்