86 காட்சி 78] வார்டர்: உனக்கு விடுதலைப்பா. பாண்டியன்: அதற்குள்ளாகவா வில்லையே... - [ஜெயில் மூன்று வருஷம் ஆக வார்டர்: உனக்கு மட்டுமல்ல. இன்றைக்கு இந்த உபகண்டத் திற்கே விடுதலை-சுதந்திரதின விழா- அதனால்தான் நீ விடுதலை செய்யப்பட்றே. பாண்டியன் : சார் ! நான் மெட்ராஸ் போரதுக்கு பாஸ் கொடுப்பாங்கள்ளே ! வார்டர் : ஒ. நீ போகவேண்டிய ஊருக்கே கொடுப்பாங்க. மெட்ராஸிலே தானே உன் குடும்பம்.... பாண்டியன் : ஆம். அங்கேதான் என் குமுதா. காட்சி 79 (குமுதா வீடு (வீடு பூட்டியிருப்பதை பாண்டியன் பார்க்கிறான்] அவன் குரல்: குமுதா நீ எங்கே போய்விட்டாய். கோயமுத் தூருக்கே போய்விட்டாயா ? அங்கு வந்து உன்னை நான் எப்படிப் பார்ப்பேன். பூமாலை, பரந்தாமன்- அவர்கள் முகத்திலியே விழிக்கக்கூடாது. அந்தப் பொல்லாதவர்கள் வீட்டிலே என் குமுதா-கூடாது - அவளை அங்கு போய் பார்க்கக்கூடாது. காட்சி 80]
[பூமாலை அறை பூமாலை: உஷா உன் உதவியை மறக்கவே முடியாது. உஷா : பரவாயில்லேம்மா. பூமாலை : தினம் தினம் ராத்ரீலே இங்கே படுத்தீன்னா அப்பா ஏதாவது ஆத்திரப்படுவாரு. போம்மா. இன்னைக்கு வீட்டுக்குப்