88 பரந்தாமன்: அக்கா....நான் ஒன்றும் கெட்ட எண்ணத்தோடு வரவில்லை. பூமாலை: ஆமாம். உன் தங்கைபோல நினைத்து உஷாவை உபசரிக்கும் நல்ல எண்ணத்தோடுதான் வந்திருக்கிறாய் ! அக்ரம் ஆட்டங்களுக்கு ஆதாரந்தேடியாக காட்டிக் கொண்டு அதிகநாள் வாழமுடியாது. அதற்கு அழிவு காலம் விரைவிலே உதயமாகிவிடும். பரந்தாமன்: அழிவு எனக்கு மட்டுமா. அவனியிலே காண்ப தெல்லாம் ஒருநாள் அழியக் கூடியதுதான். பூமாலை : அதைத்தான் நீ நன்றாக உணரவேண்டும் அழிய முடி யாதது ஒன்று இருக்கிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஓடினாலும் யுக யுகாந்திரங்கள் உருண்டு போனாலும் அழிய முடியாது - புகழ். நல்லவன் என்ற புகழ் - வீரன் என்ற புகழ். விவேகி என்ற புகழ். என் தம்பிக்கு கிடைக்க வேண்டுமென்று தவங் கிடந்தேனே அந்தப் புகழ். பரந்தாமன்: எனக்குத் தேவையில்லை அந்தப் புகழும் புகழ் பற்றிய உனது புதிய உபதேசமும். மனிதன் பிறக்கிறான் சாகிறான். இறப்பதற்கு முன்னுள்ள இடைக்காலத்திலே அவன் எண்ணியதெல்லாம் நடக்க வேண்டும். இதுதான் பரந்தாமன் கொள்கை. இதற்கு இடையூறு செய்ய யாருக் கும் சுதந்திரம் கிடையாது. பூமாலை: சூதும், சூழ்ச்சியும் சுகபோக வெறியும் கொண்ட உனக்கிருக்கிற சுதந்திரம் உன்னால் பாதிக்கப்பட்ட பரிதா பத்துக் குரியவர்களுக்கு, பாட்டாளிகளுக்கு, பாவையர் களுக்கு ஏன் பல லட்சம் பாமாக்களுக்கு இருக்கக்கூடாது. அப்படித்தானே அக்ரமக்காரா... ... பரந்தாமன்: ஆமாம், அப்படித்தான். அதைக் கேட்க நீ யார்? பூமாலை: நான் யாரா? நான் யாரா? நான்தான் அப்பா அம்மாவால் அனாதையாக விடப்பட்ட குழைந்தை பரந் தாமனை, அனுதினமும் அக்கரையோடு வளர்த்தவள்.
பக்கம்:திரும்பிப்பார்.pdf/96
தோற்றம்