உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 தம்பிக்கு தலைவலி என்றால் தனக்கு தேள் கொட்டியதுபோல் வேதனை அனுபவித்தவள். நீநெக்லஸைத் திருடி நிரபராதிப் பாண்டியனை குற்றவாளியாக்கியபோது, தங்கம் நிகர் மேனி யாளை பொங்கு கண்ணீர் அருவியோடு தனியேவிட்டு விட்டு சிங்கம் நிகர் பாண்டியன் சிறை சென்றபோது தம்பியைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக நியாயத்திற்கு எதிர் திரையிலே நின்றவள். இப்போது புரிகிறதா? நான் யாரென்று. என்னையா கேட்கிறாய் (பரந்தாமன் போக) யாரென்று? பூமா ைஎங்கே போகிறாய் - நில் - உஷாவிடம் போகாதே- வெளியே நட..... பரந்தாமன்: ஆ அவளிடந்தான் போகிறேன் என்ன செய்வாய்... பூமாலை : நில். உனக்கு இப்போது ஒரு பெண் தானே வேண்டும். பரந்தாமா உனக்கு இப்போது ஒரு பெண் தானே வேண்டும். இதோ நானிருக்கிறேன். பரந்தாமன்: ஆ. அக்கா... பூமாலை: ஆம்! உன் அக்காள்தான். ஊர்ப்பெண்கள் மீது ஓயாமல் வீசும் உன் காமவார்த்தைகளை எல்லாம் ஒன்று சேர்த்து உடன் பிறந்தவளிடம், உனக்கு முன்பிறந்த ரத்தத் திடம் வீசு ! பேசு 1 பேசுவாயாமே அன்புக்கரசி என ஆரம்பித்து அடுக்கு மொழியிலே ஆரணங்குகளை வசியப் படுத்துவாயாமே ... ம்... பேசடா...ம்... பேசு (பரந்தாமன் திரும்ப) பூமாலை: தீயவனே திரும்பிப்பார் / இங்கல்ல. நீ நடந்துவந்த பாதையிலே உன் காலடிபட்டு நசுங்கிப்போன ஜீவன்களைத் திரும்பிப்பார். உன் துரோகத்தால் துவண்ட தொழிலாளி வர்க்கத்தின் துடிதுடிப்பை திரும்பிப்பார். அழறியழுத பாமா - அடுக்குமா என்று சாபமிட்ட புண்யகோடி அய்யகோ ஏமாந்தோம் என்று கதறி கண்ணீர் வடிக்கும் ஆதரவற்ற குடும்பங்கள். அந்தியின் மொத்த வியாபாரியே -