காட்சி 82] 91 (கருடன் பதிப்பகம் பையன் : சார் ! ஆசிரியர் சார் ! பரந்தாமன் : அப்படிக் கூப்பிடாதே ! ஆசிரியன் - அறிவு நூல் கள் எழுதும் ஆசிரியன் - அழகான எழுத்தோவியன்- அவ திப்படும் பாட்டாளிகளின் தலைவன் - இந்தப் பளபளப் பான பட்டுத் திரைகளுக்குப் பின்னே மறைந்துகிடக்கும் பயங்கரமான ரகசியங்கள் உனக்குத் தெரியாது தம்பி ! உனக்குத் தெரியாது. கருடன்: பரந்தாமா! பரந்தாமன்: பரந்தாமனல்ல-பயங்கர மிருகம்,மிருகம் / மிருக மல்ல-மனிதனாகிவிட்டேன். இன்றுதான் மனிதனானேன். கருடன் : என்னப்பா சொல்றே பைத்யம் பிடிச்சவன் மாதிரி. பரந்தாமன் : பைத்யம் பிடிப்பதா-பிடித்திருந்த பைத்யம் இப் போதுதான் தெளிந்திருக்கிறது என் அக்காளால், கருடன் : சரிதான். அக்காள் உபதேசம் பண்ணீருக்காப்ல இருக்கு. உருப்டாப்லதான். பரந்தாமன்: அக்காளைப்பற்றி ஒன்றும் சொல்லாதே-அது என் தெய்வம். மூடிக்கிடந்த என் இருதயக் கதவுகளைத் திறந்து விட்ட தெய்வம் / என் இருண்ட பாதையிலே ஜோதி விளக் குக் காட்டிய மங்கையர் குல திலகம். இழிவுப் படுகுழி யிலே விழப்போன எனக்கு இறுதி மூச்சு வழங்கி - பாரடா பண்பு கெட்ட வீணணே. நீ நடந்துவந்த பாதையிலே உன் காலடி பட்டுக் கசங்கிப்போன மலர்முகவதிகள் எத்தனை பேர் - திக்கற்றவர்கள் - திசைமாறிப் போனவர் கள் - திண்டாடித் தெருவில் நிற்போர் அவர்களின் தொகை எவ்வளவு? துரோகியே திரும்பிப்பார் என்று ஆணையிட்டு என்னைத் திருத்திய தெய்வம் என் அன்புச் சகோதரி அவள் தாண்டா எனக்கு கண்கண்ட தெய்வம். கருடா, நான் தீயவழியிலே தான் நடந்துவிட்டேன். நீயுந்தான்,நீயுந் தான். நீயும் திருந்திவிடு - திரும்பிப்பார் என் தோழனே. திரும்பிப்பார் !
பக்கம்:திரும்பிப்பார்.pdf/99
தோற்றம்