பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 17அவருக்கு ஒரு மந்திரி இருந்தார். அவர் பெயர் அறிவொளி. பெயருக்கு ஏற்றபடி நல்ல அறிவாளியாக இருந்தார்; மிகவும் நல்லவர்.

முன்கோபி ராஜா திடும்திடுமென்று ஏதாவது முடிவு செய்வார். அது கெட்ட முடிவு என்றால், பட்டென்று சொல்லிவிடுவார் அந்த மந்திரி.

உடனே முன்கோபி ராஜாவுக்கு மூக்குக்குமேல் கோபம் வந்துவிடும். “நான் ராஜாவா? நீர் ராஜாவா? நான் சொல்கிறபடிதான் நீர் நடக்க வேண்டும்” என்று சீறுவார்.

“நல்லது எது? கெட்டது எது? என்று எடுத்துச் சொல்லி, நல்லதைச் செய்யச் சொல்வதுதானே மந்திரியுடைய வேலை?” என்று மந்திரி சமாதானமாகச் சொல்வார்.

“ஆமாம், பெரிய்ய வேலை!” என்று அலட்சியமாய்க் கூறுவார் முன்கோபி ராஜா.

ஒருநாள் அரண்மனை ஜோசியரிடத்திலே “ஏனய்யா, வரவர நம்ம நாட்டிலே பஞ்சம் அதிகமாயிருக்கிறதே! இதற்கு என்ன செய்யலாம்?” என்று ராஜா கேட்டார்.

ஜோசியர் பஞ்சாங்கத்தை எடுத்து வைத்துக் கொண்டு ஏதேதோ கணக்கெல்லாம் போட்டுப்

தி.வ.மா. - 2