பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18 ❖

திரும்பி வந்த மான் குட்டி



பார்த்தார். பிறகு, “நம்ம காளி கோயிலில் 51 சேவல்களைப் பலி கொடுத்தால் பஞ்சம் பஞ்சாய்ப் பறந்து விடும்” என்றார்.

அப்போது பக்கத்திலிருந்த மந்திரி சொன்னார்:

“அரசே, பஞ்சம் தீர வேண்டுமானால், விவசாயத்தைப் பெருக்க வேண்டும்; நெல் விளைச்சலுக்கு நல்ல உரம் போடவேண்டும். குளம் குட்டைகளிலே தண்ணீர் தங்குகிற மாதிரி ஆழமாக வெட்ட வேண்டும்...”

மந்திரி சொல்லி முடிக்கவில்லை.

“அட சட், வாயை மூடும். இல்லாத போனால், பிளாஸ்திரி போட்டு வாயை மூடிவிடுவேன்... எனக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டுமென்று. நீர் என்ன, என்னைவிட அறிவாளியா? உமது தலையும் என் தலையும் ஒரே அளவுதானே இருக்கின்றன. உமக்கு மட்டும் எப்படி அறிவு அதிகமாக இருக்க முடியும்?” என்று மிக மிகக் கோபமாகக் கேட்டார் ராஜா,

மந்திரி மிகவும் பொறுமைசாலிதான். இருந்தாலும் எத்தனை நாளைக்குத்தான் இப்படிப் பொறுத்துப் பொறுத்துப் பார்ப்பார்? பொறுமை இழந்த அவர், “அரசே, இனியும் நான் தங்களிடம் மந்திரியாக இருக்க விரும்பவில்லை. இன்றே என்