பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20 ❖

திரும்பி வந்த மான் குட்டி



இந்த அறிவிப்பைக் கேட்டதும், தலை பெரிதாயிருக்கிறவர்களெல்லாம் அரண்மனை நோக்கி வெள்ளிக்கிழமை காலையில் வந்து சேர்ந்தார்கள். மொத்தம் 43 பேர் இருந்தார்கள்!

ராஜா நிறையச் சணல் கயிறு கொண்டு வரச் சொன்னார். ஒவ்வொருவர் தலையையும் சணல் கயிற்றால் சுற்றளவு பார்த்து அந்த அளவுக்குச் சனல் கயிற்றைத் தனித்தனியாக வெட்ட வேண்டு மென்பது அவரது திட்டம்!

அப்போது அவர் அருகிலிருந்த மெய்க்காப்பாளன், “மகாராஜா இஞ்ச் டேப்பும், தாளும், பென்சிலும் கொண்டு வரட்டுமா? அளவைப் பார்த்துத் தாளிலே குறித்துக் கொள்ளலாம்” எனறான.

உடனே ராஜாவுக்குச் ‘சுர்’னு கோபம் வந்து விட்டது. “நீராஜாவா? நான் ராஜாவா? எனக்கா புத்தி சொல்கிறாய்! அதிகப் பிரசங்கி. இன்றிலிருந்து நீ என் மெய்க்காப்பாளன் இல்லை! வாயில் காப்பாளன்தான்! நேராக அரண்மனை வாசலுக்குப் போய் அங்கே நில்!” என்று அவனை அடித்து விரட்டினார்.

அப்புறம் ஒவ்வொருவர் தலையையும் சணலால் அளந்து அந்த அளவுக்குச் சணலைத் தனித் தனியாக வெட்டினார். வெட்டிய துண்டுகளை