பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 21அங்கேயிருந்த ஒரு நீண்ட மேஜைமேல் வைத்தார். பிறகு, எது மிகவும் நீளமானது என்று பார்த்தார். எல்லாவற்றையும்விட ஒன்று மிக நீளமாக இருந்தது.

“ஆ! இந்த அளவு தலைக்காரர்தான் இனி என்னுடைய மந்திரி” என்று குதித்தார். ஆனால் அந்த அளவு யாருடையது? அதுதான் தெரியவில்லை. அதில்தான் எந்த அடையாளமும் இல்லையே! அதனால் அவர் அந்தச் சணலை எடுத்துப் போய், ஒவ்வொருவர் தலையிலேயும் வைத்து வைத்துப் பார்த்தார். 41-வது ஆளுக்குத்தான் அது சரியாக இருந்தது. உடனே அவரையே மந்திரி யாக்கிவிட்டார். மற்றவர்களையெல்லாம் திருப்பி அனுப்பி விட்டார்!

அந்த மண்டை பருத்த மந்திரியிடம், “மந்திரி, நம் நாட்டு மக்களிலே பெரும்பாலோர் எலும்பும் தோலுமாக இருக்கிறார்கள். அவர்களெல்லாம் நன்றாகக் கொழு கொழு என்று ஆக வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்? உங்களுக்குத்தான் அதிகமான மூளை இருக்கிறதே! அதை உபயோகித்து ஒரு நல்ல யோசனையாகக் கூறுங்கள். அதன்படி செய்யலாம்” என்றார் ராஜா. உடனே அந்த மண்டை பருத்த மந்திரி சிறிதுகூடத் தயங்கவில்லை. “இது ரொம்பச் சுலபங்க. நல்லாக் கொழு கொழுன்னு