பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26 ❖

திரும்பி வந்த மான் குட்டினையும் வரவில்லை. நான் மிரட்டிக் கேட்டதும் அவர்கள் திருட்டு விழி விழித்தபடி திரும்பி ஓடி விட்டார்கள். இப்படிப்பட்ட யோசனையைச் சொல்லவா உம்மை மந்திரி ஆக்கினேன்! உமது மண்டைதான் பெரிதாயிருக்கிறது. உள்ளே இருப்பதெல்லாம் களிமண். வெறும் களிமண்!” என்று கூறிக் கொண்டே, அந்த மந்திரியின் மண்டையை இரண்டு கைகளாலும் பிடித்துப் பலங்கொண்ட மட்டும் அமுக்கினார் முன்கோபி ராஜா.

“ஐயோ! எனக்கு என்னங்க தெரியும்? பிச்சை எடுத்துக்கிட்டிருந்த என்னை நீங்கதானே மந்திரி