பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 31



“என்னம்மா இது? ஆடு மாடெல்லாம் பல் துலக்கிட்டா சாப்பிடுது?”

“அப்படியானால், நீ உடனே தோட்டத்துக்குப் போ.”

"தோட்டத்துக்கா?”

“ஆமா, அங்கே நிறையப் புல் இருக்கு இலை தழையெல்லாம் இருக்கு. பல் துலக்காமே, ஆடு மாடு மாதிரி சாப்பிடலாம்.”

பொன்னனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

“சேச்சே! பல் துலக்காம பலகாரம் சாப்பிடக் கூடாதாம். சுதந்தர தினத்திலே சுதந்தரமா எதுவும் செய்ய முடியல்லியே! அப்புறம் எதுக்கு இதை சுதந்தர தினம்கிறது? இன்னிக்குக்கூட என்னை இப்படி அம்மாவும், அப்பாவும் அடிமை போலே நடத்துறாங்களே!”

மிகுந்த சலிப்போடு, பல்லைத் துலக்கினான்; பல காரம் சாப்பிட்டான், பிறகு ஊருக்குள் நடந்து சென்றான். வழியிலே ஒரு நாயைப் பார்த்தான். உடனே தெரு ஓரமாகக் கிடந்த ஒரு கல்லை எடுத்தான்; நாயைக் குறி பார்த்து எறிந்தான். நாயின் காலிலே கல் பட்டுவிட்டது. உடனே, அந்த நாய் ‘வள்’, ‘வள்’