பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32 ❖

திரும்பி வந்த மான் குட்டிஎன்று குரைத்துக் கொண்டே பொன்னன் மேலே பாய்வதற்கு ஓடி வந்தது.

“ஐயோ! அப்பா” என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினான் பொன்னன். பக்கத்துத் தெரு முனையிலிருந்த ஒரு வீட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டான்.

‘சே, என்ன கதந்தரம் ஒரு நாய் மேலே கல் எறியக்கூட சுதந்தரம் இல்லையே!’ என்று அலுத்துக் கொண்டான்.

அரை மணி நேரம் ஆனது. தெருவிலே அந்த நாயினுடைய தலை தெரிகிறதா என்று சுவர் ஓரமாக நின்று எட்டி எட்டிப் பார்த்தான். தெரியவில்லை. மெதுவாக வெளியிலே வந்தான்.

கடைத் தெரு வழியாக நடந்து போனான். அப்போது, அவன் பின்னாலே ஒரு கார் வந்ததது.

‘பாம், பாம்... பாம், பாம்’ என்று ஒலி எழுப்பினார் அந்தக் கார் டிரைவர். பொன்னன் நடுத் தெருவிலே நடந்து போய்க் கொண்டிருந்தான். காருக்கு வழி விடவில்லை. டிரைவருக்கு இந்தப் பக்கமோ, அந்தப் பக்கமோ ஒதுங்கிப் போகவும் வழியில்லை. திரும்பத் திரும்ப ஒலி எழுப்பினார். பொன்னன் கவலைப்படாமல், மிகவும் கம்பீரமாக நடுத்தெருவில் மெதுவாக நடந்து போய்க் கொண்டிருந்தான்.