பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36 ❖

திரும்பி வந்த மான் குட்டி



எத்தனை கார்கள், வண்டிகளுக்குத் தொல்லை! அதிலே இருந்தவங்களெல்லாம் எவ்வளவு சங்கடப் பட்டிருப்பாங்க? எத்தனை பேரு வேலை கெட்டுப் போயிருக்கும்? இப்படிச் செய்யறதுதான் சுதந்தரமா?”

“நான் செய்தது தப்புத்தாம்பா.”

“சுதந்தரம்னா என்னன்னு தலைவருங்க சொல்லி யிருக்காங்க. விளக்கமாச் சொல்றேன். கேள்:

சோம்பி யிருப்பது சுதந்தரமில்லை
தொல்லை கொடுப்பதும் சுதந்தரமில்லை
வீம்பு செய்வதும் சுதந்தரமில்லை
வேறே எதுதான் சுதந்தரமாகும்?

மற்றவங்களை மதிக்கிறது சுதந்தரம். பேசுகிற பேச்சிலே, செய்கிற செயலிலே சுத்தமாயிருக்கிறது சுதந்தரம். உரிமைகள், கடமைகள்னு சொல்றோமே, அந்த ரெண்டையும் நல்லா உணர்ந்து நடந்தால், அதுதான் சுதந்தரம். பெரியவனானதும் உனக்கு இதெல்லாம் நல்லாப் புரியும்...”

அப்பா, சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் பொன்னன்,“இப்பவே எனக்கு நல்லாப் புரியுதப்பா. இனிமேல் வீண் வம்புக்குப் போகாமே நல்லதையே செய்கிறேனப்பா" என்று அப்பாவின் இரு கைகளை