பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 37



யும் பிடித்துக்கொண்டு கண் கலங்கக் கூறிக் கொண்டே மெல்ல எழுந்தான்.

“பொன்னா, பேசாமப் படுத்துக்கோ. நாளைக் காலையிலே பூரண குணமாயிடும். அப்புறம் எழுந்து நடக்கலாம், ஓடலாம்; விளையாடலாம்” என்றாள் அம்மா.

பொன்னன் எதுவும் பேசாமல், மெல்ல நடந்து, அருகில் இருந்த மகாத்மா காந்தி படத்தின் எதிரே சென்றான். இரு கைகளையும் சேர்த்து, கண்களை மூடி வணங்கினான்.

மகனின் மனம் திருந்தியதைக் கண்டு அம்மாவும் அப்பாவும் ஆனந்தம் அடைந்தார்கள்.