பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 41முறையைக் கழிக்கச் சென்னையிலுள்ள தம்முடைய தம்பி வீட்டுக்கு அவனை அனுப்பி வைத்தார்.

சோமுவின் சித்தப்பா வீடு சென்னை அண்ணா நகரில் இருந்தது. நல்ல பெரிய வீடு. எல்லா வசதிகளும் அங்கே உண்டு.

சோமு சென்னை வருவதை முன்னதாகவே எழுதியிருந்ததால், அவன் சித்தப்பா ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து, அவனை வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டின் முன்புறம் இருந்த பெரிய வரவேற்பு அறையில் அவனை உட்கார வைத்தார். உடனே, அவனுடைய சித்தி வந்து, அவனை வரவேற்று, காப்பி கொடுத்தாள்.

சோமு காப்பி சாப்பிட்டதும் உடம்பு வியர்த்தது. மேலே நிமிர்ந்து பார்த்தான். அங்கிருந்த மின் விசிறி யைக் காணோம்! “சித்தப்பா, இந்த ஹாலிலே ஒரு ஃபேன் இருக்குமே! எங்கே காணோம்?” என்று கேட்டான்.

“நீ குளிச்சு சாப்பிடு. அப்புறம் சொல்றேன்” என்றார்.

சோமு குளித்து, சாப்பிட்டு முடிந்ததும், மின் விசிறியைப் பற்றி மீண்டும் கேட்டான்.