பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 43



மேலே ‘டம்’னு ஒரு சத்தம் கேட்டது. மறுவிநாடி கீழே தொப்னு ஓர் ஓசை கேட்டது.

என்னன்னு பார்த்தோம். குஞ்சுகளுக்கு இரை எடுத்துக்கிட்டு வந்த அம்மாக் குருவிதான் மேலே சுழன்று கொண்டிருந்த விசிறியிலே அடிபட்டுக் கீழே விழுந்து கிடந்துச்சு! அதைப் பார்த்து நாங்கள் திடுக்கிட்டோம். உடனே நான் ஓடிப்போய் அதைக் கையிலே எடுத்தேன். உற்றுப் பார்த்தோம். கொஞ்சம் உயிர் இருக்கிற மாதிரி தெரிஞ்சுது. உன் சித்தி உடனே ஓடிப் போய்த் தண்ணீர் கொண்டு வந்து, அதன் வாயிலே ஊத்தினாள்; முகத்திலேயும் தெளித்தாள், என்ன செய்தும் அது பிழைக்கல்லே. செத்துப் போச்சு! அப்போதே நான் விசிறியை நிறுத்திவிட்டேன்.

தாய்ப் பறவையைக் காணாமே, குஞ்சுகளெல்லாம் அன்னிக்கு இரவு முழுவதும் ‘கீச் கீச்’னு கத்திக்கிட்டே இருந்தன. அது பரிதாபமாய்க்கத்துறதைக் கேட்கக் கேட்க எங்களுக்கு ரொம்ப வருத்தமாயிருந்துச்சு.

‘நம்ம ஃபேன் அடிச்சுத்தானே தாய்ப் பறவை செத்துப் போச்சு? இந்தப் பாவமெல்லாம் நமக்குத் தானே’ன்னு துக்கப்பட்டோம். அன்றைக்கு நானும் சாப்பிடல்லே. உன் சித்தியும் சாப்பிடல்லே. ராத்திரி