பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50 ❖

திரும்பி வந்த மான் குட்டிஅன்று நடு இரவு,

பின் தெருவிலிருந்து ஒரு சிறுவன் வியர்க்க விறு விறுக்க ஓடோடி வந்தான். கார்த்திகேயரின் மாளி கையை அடைந்தான். “ஐயா, ஐயா” என்று கத்தினான். பலமாகக் கதவைத் தட்டினான். முன் அறையில் தூங்கிக் கொண்டிருந்த கார்த்திகேயர் பரபரப்புடன் எழுந்தார். விளக்கைப் போட்டு, கம்பிக் கதவுகளின் இடைவெளி வழியாக அந்தச் சிறுவனைப் பார்த்தார்!