பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58 ❖

திரும்பி வந்த மான் குட்டி



அன்றைக்கும் வழக்கம்போல் இந்தப் பண்டங்களைக் குல்லாய்க்குள்ளே வைத்து எடுத்துக் கொண்டு போனான். கடையை விட்டுக் கால் கிலோமீட்டர் தூரம்கூடப் போயிருக்கமாட்டான்.

அப்போது மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்த இரண்டு காக்கைகள் மேலேயிருந்தபடி குப்புவின் தலைமேலிருந்த ஒலைக் குல்லாவைப் பார்த்து விட்டன.

உடனே, ஒரு காக்கை மற்றொரு காக்கையைப் பார்த்து, “அதோ கீழே பாரு, ஒரு ஒலை மூடி தெரியுது. எதையோ வச்சு மூடி ஒரு ஆள் எடுத்து போறான். நிச்சயம் அந்த மூடிக்குக் கீழே ஒரு பாத்திரம் இருக்கும். அந்தப் பாத்திரத்திலே நமக் குப்பிடிச்ச நல்ல நல்ல பண்டமெல்லாம் இருக்கும். நமக்கு அது கிடைக்கணும்னா, நான் சொல்றபடி செய்யனும்” என்றது.

குப்புவுடைய குல்லாதான் அது என்று அந்தக் காக்கைக்குத் தெரியவில்லை!

உடனே இன்னொரு காக்கை “ஓ! நீ சொல்றபடி நான் செய்கிறேன். என்ன செய்யணும்?” என்று கேட்டது.

“நீ மெதுவாக் கீழே போ. விருட்டுனு அந்த ஒலை மூடியைத் தூக்கிக்கிட்டுப் பறந்து போய், அதோ