பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 63கிராமத்திற்குப் பறந்து போகும். அங்கே அவைகளுக்கு வேண்டிய தின்பண்டங்களெல்லாம் கிடைக்கும். திருமண நாட்களிலே அல்வா, ஜாங்கிரி, வடை, போண்டா, முறுக்கு எல்லாம் கூடக் கிடைக்கும். அந்த ஊர் மக்களும் சாப்பிடுவதற்கு முன்பு காகா என்று கூவி அழைத்துச் சோற்றை ஓரிடத்தில் வைப்பார்கள். இந்த இரண்டு காக்கை களும், மற்ற காக்கைளையும் காகா என்று கத்தி அழைத்துக் கொண்டுபோய், அவர்கள் வைத்த சோற்றைப் பங்கு போட்டுத் தின்னும்.

ஒருநாள் இந்த இரு காக்கைகளும் ஒன்றாகப் பறந்து வந்து குளத்தங்கரையில் தனியாக இருந்த ஒரு மரத்தின் கிளையிலே உட்கார்ந்தன. அவை எடுத்து வந்த திண்பண்டங்களைக் காலடியில் வைத்து சிறிது சிறிதாகச் சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன.

அப்போது ஒரு காக்கை இன்னொரு காக்கையைப் பார்த்து, “நாம் தினந்தோறும் காட்டிலே யிருந்து இந்த ஊருக்குப் பறந்து வருகிறோம். இந்த ஊரிலேதான் நமக்கு வேண்டிய உணவெல்லாம் கிடைக்குது. இவ்வளவு தூரம் தினமும் பறந்து வரணுமா? இதோ இப்போ நாம் இருக்கிற மரத்திலே நீ ஒரு பக்கமும், நான் ஒரு பக்கமுமாகக் கூடு