பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64 ❖

திரும்பி வந்த மான் குட்டிகட்டிக்கிட்டு இருக்கலாமே! வீணா அலைய வேண்டாமே” என்றது.

அதற்கு இன்னொரு காக்கை, “இது ஒரு தனி மரம். நெட்டையாக ஒல்லியாக இருக்குது. பார்த்தால் ரொம்ப வயசானது போலத் தோணுது. இதிலே கூடு கட்டுறது ஆபத்து! அத்தோட நாம கூடுகட்டி, அதிலே முட்டையிட்டு, அடைகாக்கிற காலத்திலே ஜாக்கிரதையா இருக்கணும்! இந்த ஊர்ப் பசங்களிலே சிலர் பொல்லாதவங்களா இருப்பாங்க. நாம் இரை தேடப்போற சமயம் பார்த்து, அவங்க மரத்து மேலே ஏறுவாங்க. நம்ம கூட்டிலேயிருக்கிற நீல நிற முட்டைகளைப் பார்த்ததும், அதுகளை எடுத்துப் போனாலும் போயிடுவாங்க காடுதான் நமக்குச் சரி. இந்தத் தனிமரம் சரிப்படாது” என்று விவரமாகச் சொன்னது.

ஆனால் முதலில் சொன்ன காக்கை கேட்க வில்லை. நாம ரெண்டு பேரும் இந்த மரத்திலே தங்கலாம். ஏன் நாம ஒவ்வொரு நாளும் காலையிலே எழுந்திருச்சு, காட்டிலேயிருந்து இங்கே பறந்து வரணும்? அப்புறம் இருட்டுறப்போ திரும்பிப் பறந்து காட்டுக்குப் போகணும்? இது வீண் வேலை” என்று திரும்பத் திரும்பச் சொன்னது.

“நான் காட்டிலேதான் இருப்பேன். இந்த மரத்திலே வசிக்கமாட்டேன்.”