பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 65



“சரி, அப்படின்னா நீ காட்டுக்குப் போய் அங்கே இரு நான் இந்த மரத்திலேயே கூடு கட்டுறேன்.”

“உன் மனசைமாத்தவே முடியாது. நீ இங்கேயே இரு நான் காட்டுக்குப் போறேன்” என்று கூறிவிட்டு, காட்டுக்குச் சென்ற காக்கை, தினமும் அதிகாலையில் காட்டிலிருந்து பறந்து, கிராமத்திலுள்ள குளக்கரை மரத்துக்கு நேராக வரும். பிறகு, இரண்டும் சேர்ந்து ஊருக்குள் இரை தேடப் போகும்.

இப்படியே மூன்று மாதங்கள் ஓடிவிட்டன.

காட்டிலேயிருந்த காக்கையும் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்திருந்தது. குளக்கரை மரத்திலேயிருந்த காக்கையும் முட்டையிட்டுக் குஞ்சு பொரித் திருந்தது. இரண்டு காக்கைகளின் குஞ்சுகளும் ஓரளவு வளர்ந்துவிட்டன. இன்னும் நாலைந்து நாட்களிலே பறக்க ஆரம்பித்து விடும்.

அன்றைக்கு அதிகாலை, மூன்று அல்லது மூன்றரை மணி இருக்கும். ‘மட, மட’ வென்று இடி இடித்தது. ‘பளிச், பளிச்’சென்று மின்னல் மின்னியது. ‘விர், விர்’ரென்று புயல் காற்று வீசியது. தொடர்ந்து பலத்த மழையும் பெய்தது. சுழற்றிச் சுழற்றி அடித்த புயல் காற்றிலே, குளக்கரையிலிருந்த மரம் தடால்' என்று தரையிலே விழுந்துவிட்டது. அப்போது அதிலிருந்த காக்கைக் கூடும், கூட்டுக்குள்ளிருந்த

தி.வ.மா. - 5