பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 71



‘சே, என்ன பொழைப்பு? நான் தினமும்தான் வித்தை செய்கிறேன். குவளை நிறையக் காசு விழுந்தாலும், நான் ஆசைப்படுகிற பொருளை நினைச்ச நேரத்திலே நினைச்ச அளவு தின்ன முடிகிறதா? இவருகிட்டே இருக்கிற வரை இப்படியே இருக்க வேண்டியதுதான். இஷ்டம் போலச் சாப்பிட முடியாது’ என்று அடிக்கடி நினைக்கும்.

அன்று அமாவாசை. நல்ல இருட்டு. கோவிந்த சாமி, பிள்ளையார் கோயில் மண்டபத்திலே குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். பக்கத்திலே படுத்திருந்த ரங்கனுக்குத் தூக்கம் வரவில்லை. மெதுவாக இடத்தை விட்டு எழுந்தது. சந்தடியில்லாமல் காலை எட்டிப் போட்டது. கொஞ்ச துரம் போனதும், குடுகுடு என்று ஓட்டம் பிடித்தது. அந்த ஊரைவிட்டே ஓடிவிட்டது!

நடுவிலே இருந்த சின்னச் சின்ன ஊர்களைத் தாண்டி ஒரு நகரத்துக்கு வந்தது. அப்போது விடிந்துவிட்டது. காலையிலேயே வெயில் மிகக் கடுமையாக இருந்ததால், கால் சட்டைப் பைக்குள் ளிருந்த குல்லாயை எடுத்துத் தலையிலே மாட்டிக் கொண்டது ரங்கன்.

நகரத்துக்குள்ளே நுழைகிற போது, அங்கே ஒரு பெரிய மாமரம் இருந்தது. அதிலே காய்களும்,