பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 75



அந்தச் சமயம், தெருவிலே நடந்து போன ஒருவர் சும்மா போகக் கூடாதா? “ஐயோ! குரங்கு! குரங்கு!” என்று கத்தினார். உடனே பழக் கடைக்காரர் சட்டென்று திரும்பிப் பார்த்தார். ரங்கன் பழத்தைப் போட்டுவிட்டு ஓடியது, ஆத்திரத்திலே பக்கத்தில் கிடந்த பழம் நறுக்குகிற கத்தியை எடுத்து ரங்கனைப் பார்த்து எறிந்தார். ரங்கனின் வால் நுனியிலே கத்தி பட்டு, ஓர் அங்குல நீளம் துண்டிக்கப்பட்டது!

ரங்கன் கதறிக்கொண்டே, நாலுகால் பாய்ச்சலில் ஓடியது. வலி பொறுக்காமல் துடியாய்த் துடித்தது. வெகு தூரம் சென்று ஓர் ஆலமரத்தில் ஏறி வாலைப் பார்த்தது. வால் வெட்டுப்பட்டு இரத்தம் கொடகொட வென்று கொட்டுவதைக் கண்டு மிகவும் கலங்கி விட்டது. இரத்தம் மேலும் வழியாமல், வெட்டுப்பட்ட இடத்திலே கையை வைத்து, அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தது. வெகு நேரம் சென்று பார்த்தது. இரத்தம் கசிவது நின்று விட்டது.

ஆலமரக் கிளையில் அமர்ந்திருந்த ரங்கனுக்கு அப்போதுதான் கோவிந்தசாமி நினைப்பு வந்தது.

‘அவர் என்னிடத்திலே எவ்வளவு பிரியமாயிருந்தாரு! எப்படிப் பாசத்தைக் காட்டினாரு நான் இந்த மூணு நாளாப் பட்டினி கிடக்கிறேன். அவர் ஒரு வேளையாவது என்னைப்பட்டினி கிடக்க விட்டிருப்