பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76 ❖

திரும்பி வந்த மான் குட்டி



பாரா? ஒருத்தர் என் முதுகிலே கல்லால் அடிச்சாரு. ஒரு பாட்டி என் தலையிலே தடியால அடிச்சாள். கடைசியிலே, பழக்கடைக்காரர் என் வாலையே வெட்டிட்டாரே! என் எஜமான் என்னை ஒரு நாளாவது அடிச்சிருப்பாரா? திட்டினதுகூட இல்லையே! பிள்ளை மாதிரி வளர்த்தாரே! அவருக்குத் தெரியாமல் ஓடிவந்திட்டேனே! என்னைக் காணாமே அவர் துடிதுடிச்சிருப்பாரே! இந்தத் தள்ளாத வயசிலே அவர் எப்படி இருக்கிறாரோ? இனி ஒரு நிமிஷம்கூட இங்கே இருக்கப்படாது.”

மறுவிநாடி ரங்கன் மரத்திலிருந்து கீழே குதித்தது. குடுகுடுவென்று ஓடியது. முன்பு இருந்த கொட்டாம் பட்டிக்கு வந்து, கோவிந்தசாமி வழக்க மாயிருக்கிற மண்டபத்திலே பார்த்தது. அங்கே கோவிந்தசாமியைக் காணோம்! ஊரெல்லாம் தேடிப் பார்த்தது.

ஊருக்குக் கடைசியிலேயிருந்த ஓர் அரச மரத்தடியிலே கோவிந்தசாமி தூங்குவதைப் பார்த்து விட்டது அதற்கு ஒரே ஆனந்தம்! மெதுவாக அவர் பக்கத்திலே போய் உட்கார்ந்தது.

‘பாவம், நல்லாத் தூங்கறாரு எழுப்பக் கூடாது’ என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டது.