பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6 ❖

திரும்பி வந்த மான் குட்டி



“நல்லவேளையாக இந்தக் காட்டிலே சிங்கம், புலியெல்லாம் இல்லை. இருந்தால், நம்மை அடித்துச் சாப்பிட்டுவிடும். ஆனாலும் வேட்டைக் காரர்களால் நமக்கு எந்த நேரமும் ஆபத்து வரலாம்.”

“வேட்டைக்காரர்களால் ஆபத்தா! எப்படி அம்மா?”

“உன்னைப்போல் சின்னக் குட்டியாக இருந்த போது, நான் ஒரு வேட்டைக்காரனிடம் சிக்கிக் கொண்டு, படாதபாடு பட்டேன். அது மாதிரி உனக்கும் வந்துவிடக் கூடாது. அதற்காகத்தான்....” அம்மா மான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, குட்டிமான் குறுக்கிட்டது.

“ஏனம்மா, உன்னை வேட்டைக்காரன் பிடித்துப் போய் விட்டானா? அப்புறம், எப்படித் தப்பி வந்தாய்?”

“குட்டியாக இருந்த போது, ஒருநாள், நான் துள்ளிக் குதித்துச் சென்று கொண்டிருந்தேன். ஒரு புதரைத் தாண்டி, அந்தப் பக்கமாக கால்களை வைத்தேன். என் கால்கள் அங்கு விரித்து வைத்திருந்த வலையில் சிக்கிக் கொண்டன. என்ன என்னவோ செய்து பார்த்தேன். கால்களை எடுக்க முடியவில்லை. சிறிது நேரத்தில், உடம்பு முழுவ