பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81


எனவரும் திருக்குறளாகும். இராமலிங்கவள்ளலார் அருளிய திருவருட்பா அறிவுறுத்தும் அறங்கள் பலவற்றுள்ளும் தலைசிறந்து விளங்குவது சீவகாருணிய ஒழுக்கம். சீவன்-உயிர், காருணியம்-என்பது பிறவுயிர்கள் படும் துன்பத்தினைக் கண்டால் அறிவுடைய நன்மக்களுள்ளத்திலே இயல்பாகத் தோன்றும் இரக்கவுணர்வு காரணமாகப் பிற உயிர்களின் துயரங்களைப் போக்குதற்கு முற்பட்டு முயலும் கருணைத் திறம். கொல்லாமை, புலாலுண்ணாமை; ஏழைகளின் பசிதீர்த்தல் என்னும் மூவகையறங்களையும் உள்ளடக்கியதே சீவகாருணிய ஒழுக்கமாகும்.

காணா மரபினவாகிய உயிர்களுக்குக் காணுதற்குரிய உடம்புகள் படைத்தளிக்கப் பெற்றதன் நோக்கம் எல்லா உயிர்களும் தம்மையொத்த மன்னுயிர்களை உணர்ந்து அன்பு செலுத்துதற் பொருட்டேயாம் என்பதும், அவ்வாறு உயிர்கள்பால் அன்பு செலுத்தும் உணர்வுரிமை மனவுணர்வு பெற்ற மக்கட் குலத்தார்க்கே நன்கு அமைந்துள்ள தென்பதும் ஆகிய உண்மையினை ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை என்ற தொடரில் அருட்பிரகாச வள்ளலார் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளார்கள். நன்றும் தீதும் பகுத்துணர வல்ல மாந்தர்கள் தம் இனத்தார் படும் துயரங்களையும் தம்மினும் தாழ்ந்த விலங்கு பறவை முதலிய அஃறிணை உயிர்கள் படும் துன்பத்தையும் கண்டு அத்துன்பங்களைக் களைதற்குரிய அருள் முயற்சியாகிய இரக்க உணர்வினைப் பெறுதல் வேண்டுமென்பது வள்ளலார் அறிவுறுத்திய உயிர் இரக்கமாகிய ஒழுக்க நெறியின் குறிக்கோளாகும். இத்தகைய அருளுணர்வு உயிர்க்குயிராகிய தெய்வத்தின் திருவருள் பெற்றோர்க்கே உள்ளத்தில் கருணையாக நிறைந்து பிற