பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

 களாகிய சிற்றுயிர்களுக்கு அதிர்ச்சியைத் தந்து துன்பம் விளைக்காதவாறு தன்தேரிற் கட்டிய மணியின் நாவினை ஒலியெழாதபடி கயிற்றால் பிணித்துக் கட்டிக் காட்டின் வழியே செல்கின்றான். இவ்வாறு வண்டுகளாகிய சிற்றுயிர்க்கும் துன்பம் விளையாதவாறு உயிரிரக்க உணர்வுடையோனாய்த் தேரில்வரும் தலைமகனது அருள் விளக்கத் தோற்றப் பொலிவினைத் தோழி அவனது ஆருயிரனைய தலைவிக்குப் புலப்படுத்தும் நிலையில் அமைந்தது,

பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுற லஞ்சி
மணிநா வார்த்த மாண் வினைத் தேரன்
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்

எனவரும் அகநானுாற்றுப் பாடற்பகுதியாகும்.

இத்தொடர், ஒத்த அன்புடைய காதலராகிய தலைவன் தலைவி யென்னும் தலைமக்கள் அனைவர்க்கும் பிறவுயிர்களின் துன்பந்துடைக்க முற்படும் உயிரிரக்கவுணர்வு இன்றியமையாதது என்பதனை அறிவுறுத்தும் நிலையில் அமைந்துள்ளமை காணலாம்.

பறம்புமலைத் தலைவனாகிய பாரிவள்ளல் மலைவளங்காணத் தேரிற் சென்று தன் தேரினை ஓரிடத்தே நிறுத்திவிட்டு உலவச் சென்றவன் சிறிது நேரம் கழித்து மீண்டு வந்து தன் தேரினைப் பார்த்தபோது அவ்வழியிலே தான் படர்தற்குரிய கொழுகொம்பின்றி தளர்ந்து அசைந்த முல்லைக்கொடி யொன்று தன் தேரினைப் பற்றிச் சிறிது படர்ந்திருந்த காட்சியைக் கண்டான். படர் கொம்பின்றித் தன் தேரைப் பற்றிய ஒரறிவுயி