பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87


ராகிய அந்த முல்லைக் கொடியின் தளர்ச்சியை நீக்கக் கருதிய அருளுள்ளம் படைத்தோனாகிய பாரிவேள் தான் ஊர்ந்து வந்த தேரினையே அக்கொடி படர்தற்குரிய கொழு கொம்பாக நிறுத்திவிட்டு நடந்து சென்றான் என்பது சங்க இலக்கியம் கூறும் வரலாற்றுச் செய்தியாகும். உயிரிரக்க முடைய உரவோனாகிய பாரிவேள் முல்லைக்கொடிக்குத் தன் தேரை அளித்த அருள்வழிப் பட்ட இரக்கவுணர்வினை நினைந்து,

“பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்
கறங்குமணிநெடுந்தேர் கொள்கெனத் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பிற் பாரி'

எனப் பொய்யாநாவிற் புலவர் பெருமானாகிய கபிலர் உள்ளம் உருகுகின்றார். தம்மைத் துன்பமின்றிக் காத்துக் கொள்ளும் மனவுணர்வும் செயலாற்றலும் வாய்க்கப் பெற்றமக்கள் படுந்துன்பத்தினை அகற்றுவதோடு அமைந்து விடாமல், அத்தகைய உணர்வுவன்மை வாய்க்கப் பெறாத சிற்றுயிர்களின் துயரத்தையும் உணர்ந்து போக்கும் உயிரிரக்க வுணர்வுடையராய்ப் பண்டைத் தமிழ் வேந்தர் வாழ்ந்தார்கள். சோழர்குல முதல்வனாகிய சிபி என்னும் மன்னன், பருந்தின் தாக்குதலுக்குப் பயந்து தன்னை அடைக்கலமாக அடைந்த புறாவைப் பாதுகாத்தல் வேண்டியும், அப்புறாவை உணவாக நாடித் தொடர்ந்துவந்த பருந்தின் பசியினைப் போக்குதல் வேண்டியும் தன் உடம்பினை அரிந்து பருந்துக்கு அளித்துப் பருந்தின் பசித்துன்பத்தை யகற்றிப் புறாவினைப் பாதுகாத்தான் என்பது தமிழகத்தின் தொன்மை வரலாறாகும். நிலத்தின்மேல் உயிர் வாழ்வார்க்குக் கதிரவனது வெய்யில் வெப்பத்தால் உண்டாகும் தளர்ச்சி நீங்கும்படி கதிரவனின் வெப்பத்தைத் தம் சடைக்கற்றைகளால் தாங்கிக்