பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96


களையும், எக்காலத்தும் அழியாத முத்தி இன்பத்தையும் கடவுளால் நல்குவதாகும். இவ்வாறு மன்னுயிர்களுக்கு நேரிடுகின்ற அல்லல்களைப் போக்குவதற்குரிய வல்லப சுதந்திரமும் அறிவும் இருந்தும், அல்வாறு செய்யாமல் தமது ஆற்றலை வஞ்சித் தொழுகும் மாந்தர்க்கு இவ்வுலக இன்பத்தோடு முத்தியின்பத்தையும் அதுபவிக்கின்ற உரிமை இறையருளால் இல்லாதொழிந்தது. இன்னோர் இக்காலத்தில் நுகருகின்ற புவனயோகங்களையும் இழந்து விடுவர் என அருள் நூல்கள் விதித்திருக்கின்றன. ஆகவே தமக்கு நேரும் இடர்களைப் போக்குவதற்குரிய அறிவும் சுதந்தரமுமில்லாத சிற்றுயிர்களின் துன்பங்களை நீக்கத்தக்க அறிவும் சுதந்தரமும் வாய்க்கப் பெற்ற மாந்தர்கள். தமக்குள்ள வல்லப சுதந்தரத்தை வஞ்சித்து மறையாமல் பிறவுயிர்கள் படுந்துன்பத்தினை அருளால் நீக்க முற்படுவதே சீவகாருண்யத்தின் முக்கியமான குறிக்கோளாகும். உயிரிரக்க ஒழுகலாறாகிய இதன் கண் உண்மையாக நம்பிக்கை வைத்துப் பசித்த சீவர்களுக்கு ஆகாரத்தால் பசி நீக்கவும். கொலைப்படும் சீவர்களுக்கு உரிய காலத்தில் வந்து தடுக்கும் செயல் வகையால் கொலைத் துன்பத்தை நீக்கியும், இவ்வாறு மனநிறைவாகிய இன்பத்தை உண்டு பண்ணுவதே அறிவறிந்த மக்கட் பிறப்பினால் அடைதற்குரிய மேலான நற்பயனாகும், என அருட்பிரகாச வள்ளலார் தாம் எழுதிய சீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலின் முற்பகுதியில் தெளிவாக விளக்கியுள்ளார்.

அருட்பிரகாச வள்ளலார் இறைவனை முன்னிலைப் படுத்திப் போற்றிய 'பிள்ளைப் பெரு விண்ணப்பம்' என்னும் பனுவலில் 'சீவகாருண்யம்' என்ற வடமொழித் தொடர்ப் பொருளை உயிரிரக்கமெனத் தமிழ்த் தொடராக்கி விளக்கம் தந்துள்ளார்கள். இந்நுட்பம்: