பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ix


களில் எனக்கு இயல்பாகவுள்ள ஆர்வத்தாலும் அத்திரு முறைகளுக்கு விளக்கவுரை போன்று வள்ளலார் பாடியருளிய திருவருட்பாப் பனுவலின் சிறப்பினைச் சைவவுலகம் உள்ளவாறு உணர்ந்து போற்றுதல்வேண்டும் என்னும் ஆசையினாலும் இச்சிறுநூலை எழுதத்தொடங்கினேன். எனக்கு உறுதுணையாய் உடனிருந்து உரியகருத்துக்களை வழங்கி இந்நூலை எழுதி நிறைவேற்றியவர் அருள் நெறிச் செல்வர் பழ. சண்முகனார் அவர்களேயாவர் அவர்கட்கு எனது வணக்கத்தினையும், நன்றியையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சைவத்திருமுறைகளில் உண்மையான மதிப்புடைய சித்தாந்தச் சைவர்கள் சிலர், சமயங்கடந்த பொது நெறி யாகிய சுத்த சன்மார்க்கத்தை வற்புறுத்தும் திருவருட்பாவினைச் சைவத்திருமுறைகட்கு மாறுபட்ட கருத்துக்களை வற்புறத்தும் நூலாகப் பிறழவுணர்ந்து அயன்மை செய்து வருகின்றனர். திருவருட்பாவின் சமரச நன்னெறியினை வற்புறுத்தும் குறிக்கோளுடைய சன்மார்க்க அன்பர்களில் ஒருசாரார் வள்ளலார் பாடிய முதல் ஐந்து திருமுறைகள் சைவத்திருமுறையாசிரியர்களையும் அவர்கள் அருளிய திருமுறைப் பனுவல்களையும் போற்றுதலால் அவற்றை ஏற்றுக் கொள்ளும் விருப்பின்றிச் சிறப்பாகச் சாதிசமயப்பிணக்கொழித்துச் சமரச சன்மார்க்க நெறியினை வற்புறுத்தும் ஆறாத் திருமுறையினையே தமக்குரிய ஆதார நூலாகக் கொள்கின்றனர்.

இராமலிங்கவள்ளலார் வற்புறுத்தும், சமரச சுத்த சன்மார்க்கத்தின் விளைபுலமாகவும் தமிழ்மக்களின் தெய்வத்திறம் பேசும் திருவருளிலக்கியமாகவும் திகழும் சைவத்திருமுறைகளை ஆதாரமாகக் கொள்ளுதற்கு