பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106


தளித்து எஞ்சியதை உண்பாரைப் 'பசி' யென்று சொல்லப்படும் தீய நோய் தீண்டுதல் இல்லை எனவும் அறிவுறுத்துகின்றது.

அதிகமான் நெடுமான் அஞ்சி, என்னும் வள்ளல் தான் உண்ணத் தொடங்கும் போது சிறிய அளவுடைய சோறாயிருந்தாலும் அதனை மிகப் பல உண்கலங்களிலும் பகுத்துப் படைத்துப் பலரோடும் உடனிருந்து உண்பான் எனவும், மிக்க அளவினையுடைய சோறாயிருந்தாலும் அதனைப் பல உண்கலன்களிலும் படைத்துப் பலரோடு உண்டான் எனவும், அவ்வாறு பகுத்துண்ணுதலாகிய அறத்தினையுடைய அவ்வள்ளல் நம்மைவிட்டுப் பிரிந்தனனே எனவும் செயலற்று இரங்கும் நிலையில்,

"சிறுசோற்றானும் நனிபல கலத்தன் மன்னே
பெருஞ் சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே"

என ஒளவையார் வருந்திப் பாடியுள்ளார்.

"சோறு எல்லார்க்கும் பொதுவாதலால் சிற்றளவுடைய சோறாயினும் அதனைப் பல உண்கலன்களிலும் பகுத்துப் பலரோடும் உடனிருந்து உண்பன், அத்தகைய பெரியோன் இன்று இல்லையே. மிக்க அளவினையுடைய சோறாயினும் அதனைப் பல உண்கலன்களிலும், பகுத்துப் பலரோடும் உண்பன், அத்தகைய நெடுமான் அஞ்சி இன்று நம்மைவிட்டுப் பிரிந்தனனே” என்பது மேற்குறித்த தொடரின் பொருளாகும். இதனால் தன்னிடமுள்ள உணவுப் பொருள் சிறிய அளவினதாயினும் பெரிய அளவினதாயினும் பசியால் வருந்துவோர் பலர்க்கும் பகுத்தளித்து உண்னும் பகுத்துண்டலாகிய நல்லறத்தைத் தன் வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகியவன்