பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116


குறித்து உயிர்விடத்தக்க மானிகளும் பசி நேரிட்ட போது சொல்லத் தகாதவரிடத்தும் சொல்லி மானங் குலைகின்றார்கள். சாதி, சமய ஆசாரங்களில் அழுத்தமுடைய ஆச்சாரியர்களும் பசி வந்தால் ஆசாரத்தை மறந்து ஆகாரத்திற்கு எதிர் பார்க்கிறார்கள். கல்வி கேள்விகளில் நிரம்பி அறிதற்கரிய நுட்பங்களை அறிந்து செய்தற்கரிய செய்கைகளைச் செய்து முடிக்க வல்லவர்களும், பசி நேரிட்டபோது அறிவுங் கருத்தும் அழிந்து தடுமாறுகிறார்கள் இராப்பகல் தோன்றாது புணர்ச்சி யின்பத்திற் பொங்குகின்ற காமிகளும் பசிநேரிட்டபோது புணர்ச்சியை மறந்து காமத்தைக் கசந்து கலங்குகிறார்கள். நாமே பெரியவர், நமக்கு மேற் பெரியவர் இல்லை என்று இறுமாப்படைகின்ற அகங்காரிகளும் பசிநேரிட்ட போது ஆங்காரங் குலைந்து ஆகாரம் கொடுப்பவரைப் பெரியராகப் புகழ்கின்றார்கள். ஒருவகைக் காரியங்களில் அநேக வகைகளால் உபசரிக்கச் செய்கின்ற டம்பர்களும், பசிநேரிட்ட போது டம்பத்தை இழந்து மயங்குகின்றார்கள். இவரிவர் இப்படி இப்படியாகில் ஒருவகை யாதாரமு மில்லாத ஏழைகள், பசிநேரிட்ட போது என்ன வாழ்வு என்று சொல்வார்கள். அந்தக் காலத்தில் அந்த ஏழை களுக்கு ஆகாரம் கிடைத்தால் எப்படிப்பட்ட சந்தோஷம் உண்டாகும். அந்த சந்தோஷத்தைத் தோற்றுவித்தவர்களுக்கு எப்படிப்பட்ட லாபம் கிடைக்கும். இப்படிப் பட்டதென்று சொல்லுதற்கு அருமை என்றறிய வேண்டும்.

சீவர்களுக்குப் பசி அதிகரிக்குங்காலத்தில் சீவ அறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது. அது மயங்கவே அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம் மறைபடுகின்றது. அது மறையவே புருடதத்துவம் சோர்ந்து விடுகின்றது. அது சோரவே ப்ரகிருதி தத்துவம் மழுங்குகின்றது. அது