பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117

மழுங்கவே குணங்கலெல்லாம் பேதப்படுகின்றன. மனம் தடுமாறிச் சிதறுகின்றது - புத்தி கெடுகின்றது. சித்தங் கலங்குகின்றது. அகங்காரம் அழிகின்றது பிராணன் சுழல்கின்றது. பூதங்களெல்லாம் - புழுங்குகின்றன. வாத, பித்த, சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றன. கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது. காது கும்மென்று செவிடு படுகின்றது. நா உலர்ந்து வறளுகின்றது. நாசி குழைந்து உலர்கின்றது. தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது. கை, கால், சோர்ந்து துவளு கின்றன. வாக்குத் தொனிமாறி குளறுகின்றது. பற்கள் தளருகின்றன. மலசலவழி வெதும்புகின்றது. மேனி கருகுகின்றது. ரோமம் வெறிக்கின்றது. நரம்புகள் குழைந்து நைகின்றன. நாடிகள் கட்டு விட்டுக் குழைகின்றன. எலும்புகள், கருகிப் பூட்டுகள் நெக்கு விடுகின்றன. இருதயம் வேகின்றது. மூளை சுருங்குகின்றது. சுக்கிலம் வெதும்பி வற்றுகின்றது. ஈரல் கரைகின்றது. இரத்தமும் சலமும் சுவறுகின்றன. மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றது. வயிறு பகீரென்றெரிகின்றது தாபசோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன. உயிரிழந்து விடுவதற்கு மிகவுஞ் சமீபித்த அடையாளங்களும் அநுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன. பசியினால் இவ்வளவு அவத்தைகளும தோன்றுவது சீவர்களுக் கெல்லாம் பொதுவாகவே யிருக்கின்றது.

இவ்வளவு அவத்தைகளும் ஆகாரங் கிடைத்தபோது உண்டு பசி நீங்க நீங்குகின்றன. அப்போது தத்துவங்களெல்லாம் தழைத்து உள்ளங் குளிர்ந்து அறிவு விளங்கி அகத்திலும் முகத்திலும் சீவகளையுங் கடவுட்களை யுந்துளும்பி ஒப்பில்லாத திருப்தியின்பம் உண்டாகின்றது. இப்படிப்பட்ட இன்பத்தை உ ண்டு பண்ணுகின்ற புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று