பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118


சொல்லலாம். இந்தப் புண்ணியத்தைச் செய்கின்ற புண்ணியவான்களை எந்தத் தெய்வத்துக்குச் சரி என்று சொல்லலாம்! எல்லாத் தெய்வங்கட்கும் மேலாகிய கடவுளம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும். இதனால் நரகவேதனை சனனவேதனை மரண வேதனை என்கின்ற மூன்று வேதனைகளும் கூடி முடிந்த வேதனையே பசி வேதனை என்றும், அகம், புறம், நடு, கீழ் மேல் பாகம் என்கிற எவ்விடத்தும் நிறைந்து எக்காலத்தும் வேறுபடாத மோட்ச இன்பமே ஆகாரத் தினாலுண்டாகும் திருப்தியின்பம் என்றும் அறியப்படும். பசியில்லாவிடில் சீவர்கள் ஆகாரங் குறித்து ஒருவரையொருவர் எதிர் பார்க்க மாட்டார்கள்; எதிர் பாராத பட்சத்தில் உபகாரச் செய்கை தோன்றாது. அது தோன்றாத போது சீவகாருணியம் விளங்காது. அது விளங்காதபோது கடவுளருள் கிடைக்க மாட்டாது. ஆதலால் பசியும் கடவுளாற் கொடுக்கப்பட்ட ஒர் உபகாரக் கருவியென்றே அறியவேண்டும்.

பசியினால் துன்பப் படுகிள்றவர்கன் ஆகாரத்தைக் கண்ட காலத்தில் அடைகின்ற சந்தோஷம் தாய், பிதா, பெண்டு, பிள்ளை, காணி, பூமி பொன், மணி முதலான வைகளைக் கண்ட காலத்திலும் அடையார்களாயின் ஆகாரம் உண்ட காலத்தில் உண்டாகும் சந்தோஷம் எப்படிப்பட்டதாக இருக்கும்? ஆதலால் இந்த ஆகாரத்தின் சொரூப ரூப சுபாவங்களும் கடவுளருளின் ஏகதேசத்தின் சொருப ரூப சுபாவங்களாகவே அறியவேண்டும்,

பசி என்கிற நெருப்பானது ஏழைகள் தேகத்தினுள் பற்றி எரிகின்ற போது ஆகாரத்தால் அவிக்கின்றது