பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கொலையும் புலையும் தவிர்த்த குரிசில்


'இலங்கும் உயிர் உடல் அனைத்தும் ஈசன் கோயில்'

என்பது,

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மனிவிளக்கே.

(திருமந்திரம் 1823)

எனவரும் திருமூலர் வாய்மொழியால் அறிவுறுத்தப்பெறும் பேருண்மையாகும்.

கருணைக் கடலாகிய இறைவனுக்கு ஊனினாலாய இவ்வுடம்பு ஆலயமாகவும், உடம்பின் உட்கருவியாகிய உள்ளம் கருவறையாகிய பெருங்கோயிலாகவும் அம்முதல்வனது பொருள்சேர் புகழ்த்திறங்களை எடுத்துரைத்து வாழ்த்துதற்குரிய வாயானது, அக்கோயிலுக்குரிய கோபுர வாயிலாகவும், ஐயத்துக் கிடமின்றி மெய்ப் பொருளை உணர்ந்து போற்றும் சிவஞானத் தெளிவுடையோர்களுக்கு அவர்தம் ஆன்மாவே இறைவன் எழுந்தருளி அருள் வழங்குதற்குரிய சிவலிங்கமாகிய அருட்குறியாகவும், ஆன்மாவைக் கள்ளத்தால் தன்வழி சர்த்து நிற்கும்