பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139


கலியுறு சிறிய தெய்வவெங்கோயில்
கண்ட காலத்திலும் பயந்தேன்

எனவும்;

துண்ணெனக் கொடியோர் பிறவுயிர்கொல்லத்
தொடங்கிய போதெலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிறவுயிர் பதைக்கக்
கண்டகா லத்திலும் பயந்தேன்,
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி
வகைகளும் கண்டபோ தெல்லாம்
எண்ணிஎன் னுள்ளம் நடுங்கிய நடுக்கம்
எந்தைநின் திருவுள மறியும்.

(3473)

எனவும் திருவருட் பிரகாசவள்ளலார் கொலையும் புலையும் ஆகிய செயல்களின் கொடுமையினையும், புலாலுண்ணாமையாகிய அறத்தின் சிறப்பினையும் படிப்போர் நெஞ்சம் நெக்குருக எடுத்துக் கூறியுள்ளார். கற்போர் நெஞ்சம் கசிந்துருகும் நிலையிற் பாடப்பெற்ற இத் திருப்பாடல்கள் அருட்பிரகாச வள்ளலாரது உள்ளத்தின் உயிரிரக்கவுணர்வினை நன்கு புலப்படுத்துவனவாம். இங்ஙனம் வள்ளலாரது திருவுள்ளம் உலகியலில் ஈடுபடும்பொழுதெல்லாம் உயிரிரக்கம் பற்றியே செல்வதாயிற்று,

இரக்கவுணர்வையும், அடிகளாரையும் பிரித்துண வொண்ணாத நிலையில் எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணியிரங்கும் தெய்வ அருட்கருணை வடிவாகவே இராமலிங்க அடிகளார் திகழ்ந்தார் என்பது, அவர்பாடி யருளிய திருவருட்பாப் பாடல்களால் இனிது விளங்கும்,

புலால் உண்ணும் கருத்துடையோர் சிறந்த கல்வியும் உலகம் வியந்து போற்றத்தக்க அற்புதச் செயலும் பேரறிவும் பேராற்றலும் பெற்று விள்ங்கினாலும் அன்னார் மெய்யுணர்வுடைய ஞானிகளாக