பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

பொய்யறிவிற் புலைமனத்துக் கொடியேன் முன்பிறப்பில்
புரிந்ததவம் யாததனைப் புகன்றருள வேண்டும்
துய்யறிவுக் கறிவாகி மணிமன்றில் நடஞ்செய்
சுத்தபரி பூரணமாம் சுகரூபப் பொருளே

(3055)

சுற்றதுமற் றவ்வழிமா சூதது என்றெண்ணாத்
தொண்டரெலாம் கற்கின்றார் பண்டுமின்றுங் காணார்
எற்றதும்பு மணிமன்றில் இன்பநடம்புரியும்
என்னுடைய துரையே நான் நின்னுடைய அருளால்
கற்றது நின்னிடத்தேபின் கேட்டது நின்னிடத்தே
கண்டது நின்னிடத்தே உட்கொண்டது நின்னிடத்தே
பெற்றது நின்னிடத்தே இன்புற்றது நின்னிடத்தே
பெரியதவம் புரிந்தேன் என்பெற்றி அதிசயமே

(3044)

ஒதாதுணர்ந்திட ஒளி அளித் தெனக்கே
ஆதார மாகிய அருட்பெருஞ்சோதி

(அகவல்-23, 24)

எனவும்,

வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை
வேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும்
தூண்டாத மணிவிளக்கே பொதுவிலாடும்
சுடர்க்கொழுந்தே என்னுயிர்க்குத் துணையே என்னை
ஆண்டாறு மூன்றாண்டில் ஆண்டு கொண்ட
அருட்கடலே என்னுள்ளத் தமர்ந்ததேவே
ஈண்டாவ எனச்சிறிய அடியேன் உள்ளத்
தெண்னம் அறிந்தருளாயேல் என் செய்கேனே

(2697)