பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147


என்னையறியாப் பருவத்தாண்டு கொண்ட
என்குருவே எனக்குரிய இன்பமே

(2698)

நாதா பொன் அம்பலத்தே அறிவானந்த நாடகஞ்செய்
பாதா துரும்பினும் பற்றாத என்னைப் பணிகொண்டெல்லாம்
ஒதாதுணர உணர்த்தி உள்ளேநின் றுளவுசொன்ன
நீதா நினைமறந் தென்நினைக்கேன் இந்த நீணிலத்தே.

(2775)

வேண்டார் உளரோ நின்னருளை
மேலோரன்றிக் கீழோரும்
ஈண்டார் வதற்கு வேண்டினரால்
இன்று புதிதோ யான் வேண்டல்
தூண்டா விளக்கே திருப்பொதுவிற்
சோதிமணியே ஆறொடு மூன்
றாண்டவதிலே முன்னென்னை
ஆண்டாய் கருணை அளித்தருளே

(3597)

உலகியலோ டருளியதும் ஒருங்கறியச் சிறியேன்
உணர்விலிருந் துணர்த்தி

(3159)

எனவரும் வள்ளலார் வாய்மொழிகள் அகச் சான்றுகளா யமைந்து நன்கு புலப்படுத்தல் காணலாம்.

மாற்றமனங்கழியநின்ற இறைவனை வழிபடும் நெறிகளில் அன்பு மீதுர்ந்த பத்திமைப் பாடல்களால் அம்முதல்வனுடைய புகழ்த்திறங்களை இசையுடன் போற்றி வழிபடுதலே எளிமையும் இனிமையும் வாய்ந்த நெறியாகு மென்பர் பெரியோர்.