பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xiv


வளர்ந்தது என்று வரன்முறை விளக்கம் தரும் பேராசிரியர் வெள்ளைவாரணனார், அருட்பாவினால் பழந்தமிழ்க் கொள்கைகள் புதுமலர்ச்சி பெற்றதையும், முன்னூல்களில் நுண்ணிதிற் கிடந்த மறைமொழிகள் பலரறிய வெளிப்பாடு ஆனதையும், இதுகாறும் யாரும காட்டாத தடம் புகுந்து அழுத்தமாக எழுதியுள்ளார். இச்சிந்தனை நூலின் தனிச்சிறப்பு இது.

சன்மார்க்கநெறி பரப்பிய இராமலிங்க வள்ளலார் இன்றைக்கு நூறாண்டுகட்கு முன்னரே இறைவன் திருவகுளால் தெளிந்து வகைப்படுத்தி உணர்த்திய தேகசுதந்திரம், போகசுதந்திரம், சிவசுதந்திரம், திருவருட் சுதந்கிரம் ஆகிய சுதந்திரவுணர்வுகளின் இயல்பினை மக்கள் எல்லாரும் நன்குணர்ந்து, பயன்பெறும் வண்ணம் உலகமக்கள் அனைவர்க்கும் ஆங்கிலம் முதலிய பல்வேறு மொழிகளிலும் கட்டுரை வாயிலாகவும் சொற்பொழிவு வாயிலாகவும் அறிவித்தல் நம்நாட்டு அறிஞர் பெருமக்களின் தலையாய கடமையாகும் என்பது திருமுறைச் செல்வரின் நல்லுரை. அதன்படி இந்நூலேனும் பன் மொழிப்படும் என்று ஆசைப்படு வோமாக. பாரத வொருமைக்கும் ஞாலவொருமைப் பாட்டிற்கும் நன் னெறியம் காட்டவல்லநாடி எம்மொழிஉண்டு? அம் மொழிதான் தமிழ்.

இச்சிந்தனை நூல் கடவுள் ஒருவரே என்பது முதலாகத் திருமுறையும் திருவருட்பாவும் என்பதுஈறாகப் பதினாறு பகுதிகொண்டது. வள்ளலாரின் ஒதாவுணர்வு, பன்னுாற்புலமை, யாப்பு வளம், உரைநடைத்திறம், விண்ணப்பநடை, இசைப்பாடல்கள், தெய்வக்காதல், திருமுறைப்பதிவு, இலக்கியச்செல்வாக்கு எல்லாம் பன்னூற் சான்றுகளொடு நன்னடையில் விளக்கம் பெற்றுள. தேசியகவி பாரதியார்க்குக் கருத்தாலும்