பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

151


வெகுளியை அடக்குதலின் இன்றியமையாமையை வற்புறுத்துங்கால்,

பாபக்கடற்கோர் படுகடலாம் பாழ்வெகுளிக்
கோபக் கடலிற் குளித்தனையே - தாபமுறச்
செல்லாவிடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனில் தீயதென்ற தெண்ணிலையோ மல்லல்பெறத்
'தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க' என்றதனைப்
பொன்னைப்போல் போற்றிப் புகழ்ந்திலையே
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல என்னும்
திகழ்வாய்மையும் நீ தெளியாய்

(432-435)

எனவரும் நெஞ்சறிவுறுத்தற் பகுதியில் வெகுளாமை என்ற அதிகாரத்தில் வரும் மூன்று திருக்குறளையும் ஒருசேர எடுத்தாண்டமை காணலாம்.

நாழிகைமுன்
நின்றார் இருந்தார் நிலைகுலைய வீழ்ந்துயிர்தான்
சென்றார் எனக் கேட்டுந்தேர்ந்திலையே

(௸ 475)

என யாக்கை நிலையாமையை உணர்த்தும் இக்கண்ணி

புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை-இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுதலான்

எனவரும் நாலடியார் செய்யுளை அடியொற்றி யமைந்திருத்தல் காணலாம்.

பரஞ்சோதி முனிவர்பால் உபதேசம் பெற்ற மெய்கண்ட தேவநாயனாருக்குத் திருவெண்ணெய் நல்லூரில்