பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152


உள்ள பொல்லாப்பிள்ளையார் சித்தாந்தச் செம்பொருளை விளங்க அருளிச்செய்த திறத்தையும், கணேசர் கபிலருக்கு அருள் செய்த திறத்தையும்,

விண்ணவர் புகழும் மெய்கண்ட நாதன்
வித்தகக் கபிலனாதியர்க்கே
கண் அருள் செயும்நின் பெருமையை அடியேன்
கனவிலும் நனவிலும் மறவேன்

(2533)

எனவரும் வல்லபை கணேசர் பிரசாதமாலையில் விளக்கியுள்ளமை காணலாம்.

புறத்தே உலகியற் பொருளைப் பற்றி ஒடும் இயல்பினதாகிய மனமானது ஆன்ம அறிவுக்குக் கட்டுப்பட்டு அடங்குதலால் வரும் பயனை எடுத்துரைப்பது,

-சுற்றிமனம்
தானடங்கின் எல்லாச் சகமும் அடங்குமொரு
மானடங் கொள் பாத மலர்வாய்க்கும்

(திருவருட்பா 608/9)

எனவரும் நெஞ்சறிவுறுத்தல் கண்ணியாகும்.

இது, சிவஞானிகளது மன அடக்கத்தால் உலக மக்களுக்கு உண்டாகும் நலங்களை விரித்துரைக்கும் நிலையிலமைந்த பின்வரும் திருக்களிற்றுப் படியார் பாடலின் சொற்பொருள் நலன்களை நினைவு படுத்தும் முறையில் அமைந்துள்ளமை காணலாம்.

தாமடங்க இந்தத் தலமடங்கும் தாபதர்கள்
தாமுணரில் இந்தத் தலமுணரும்-தாமுனியில்
பூமடந்தை தங்காள் புகழ்மடந்தை போயகலும்
நாமடந்தை நில்லாள் நயந்து.